முரசொலி நிலம் - உண்மையை நிரூபிப்பேன்: திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்
திமுகவுக்கு சொந்தமான முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலமென்று புகார் எழுந்த நிலையில், அதிகாரம் படைத்த ஆணையத்திடம் உரிய நேரத்தில் ஆதாரங்கள் வழங்கி அதன் உண்மை தன்மையை நிரூபிக்கப் போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 17ம் தேதி மருத்துவர் ராமதாஸ் முரசொலி பஞ்சமி நிலம் என்று குறிப்பிட்டதை அடுத்து, 21ம் தேதி பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சீனிவாசன் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் புகார் அளித்தார்.
முரசொலி பஞ்சமி நிலமாக இருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதை அறிக்கையில் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், பாஜக நிர்வாகி சீனிவாசன் புகார் மீது நடவடிக்கை எடுத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், தமிழக தலைமை செயலாளருக்கு இம்மாதம் 19ம் ஆஜராக உத்தரவிட்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
இறுதியாக தமிழக நிர்வாகத்தில் என்ன ஒரு வேகம் என்று வியப்பு தெரிவித்த ஸ்டாலின், முரசொலி குறித்த பழியை அதிகாரம் படைத்த ஆணையத்திடம் உரிய நேரத்தில் ஆதாரங்கள் வழங்கி அதன் உண்மை தன்மையை நிரூபிக்கப்படும் என்றும், வீண்பழி சுமத்துவோருக்கு இதுவே இறுதி பதில் என்றும் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story