மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
இரண்டு நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்த நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர்,
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் 7500 அடியில் இருந்த நிலையில் நேற்று 6205 அடியாக குறைந்தது.
இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7890 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு 16000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணை நீர்மட்டம் 119.50 அடியாக உள்ளது. மேலும் அணையில் தற்போது 92.67 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.
Related Tags :
Next Story