தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது -ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி


தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது -ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2019 1:00 PM IST (Updated: 8 Nov 2019 1:00 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்று ரஜினிகாந்த் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல தனக்கு பாஜக சாயம் பூச முயற்சி நடப்பதாக  கூறினார். நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்டி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறிப்போனது. 

இதையடுத்து, சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:- நான் எப்போதும் வெளிப்படையாக பேசி  வருகிறேன். நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன். தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது.

 திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன.  சிலர் பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள். அரசியலில் இது சகஜம். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும். எம்.ஜி.ஆர் கூட கட்சி தொடங்கி முதல்வராகும் வரை தொடர்ந்து படங்களில் நடித்தார்” என்றார்.

Next Story