திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
சென்னை,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி பொதுக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர்.
பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி படங்களுக்கு மலர்தூவி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பின்னர் சுர்ஜித், சுபஸ்ரீ, முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மற்றும் அண்மையில் மறைந்த திமுக உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி திமுக பொது செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்ட போது பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
அதன் பிறகு இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கடந்த இடைதேர்தலில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் அடுத்த உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சி தொடர்பான விவகாரங்கள் குறித்தும் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story