'அதிமுக ஏழைகளின் கட்சி; திமுக கோடீஸ்வர கட்சி!'- அமைச்சர் ஜெயக்குமார்


அதிமுக ஏழைகளின் கட்சி; திமுக கோடீஸ்வர கட்சி!- அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 15 Nov 2019 11:57 AM IST (Updated: 15 Nov 2019 11:57 AM IST)
t-max-icont-min-icon

திமுகவில் மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயித்தது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார் 'அதிமுக ஏழைகளின் கட்சி, திமுக கோடீஸ்வர கட்சி' என கூறினார்.

சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுகவில் வேட்புமனு தாக்கல் செய்பவர்கள், ஆட்சியின் சாதனைகளை கூறுவோம் என்கின்றனர். ஆனால், 2011 முதல் நாங்கள் தான் ஆட்சியில் உள்ளோம். எங்களின் சாதனைகள், திட்டங்கள் ஏழைகளுக்கு சென்றடைந்துள்ளன. அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் வகையில் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பாக பேசாமல் யாரோ எழுதி கொடுத்ததை பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

திமுகவில் மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயித்தது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஏழைகளின் கட்சி; திமுக கோடீஸ்வர கட்சி என கூறினார்.

Next Story