கச்சத்தீவு அருகே 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
கச்சத்தீவு அருகே 1,000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்து உள்ளது.
ராமேஸ்வரம்,
கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசிடம் மீனவ அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட தகவலில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வருடம் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்து உள்ளது என தெரிவித்திருந்தது. இவற்றில் கடந்த 14ந்தேதி வரை 5 தாக்குதல் சம்பவங்களும், 44 கைது நடவடிக்கைகளும் நடந்துள்ளன. 14 மீனவர்கள் காயமடைந்து உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இதுவரை இலங்கை சிறையில் இருந்து 2,079 இந்திய மீனவர்கள் அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கச்சத்தீவு அருகே 50க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று 1,000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி வந்த இலங்கை கடற்படை கப்பலில் இருந்த ராட்சத விளக்குகளை எரிய விட்டுள்ளனர்.
இதனால் மீனவர்கள் அச்சமடைந்தனர். திடீரென அவர்கள் மீது சர்வதேச கடல் எல்லை பகுதியை கடந்து வந்துள்ளனர் என்று கூறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி விரட்டியடித்து உள்ளது. இதில் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமடைந்து உள்ளன.
Related Tags :
Next Story