மாநில செய்திகள்

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் + "||" + Rainfall likely due to heatwave in Tamil Nadu - Chennai Meteorological Department

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக கோயம்புத்தூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 7 செ.மீ மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.