தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை தண்டவாளங்கள் மூழ்கியதால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மதியத்துக்கு பிறகு பெய்ய தொடங்கிய பலத்த மழை விடிய, விடிய கொட்டித்தீர்த்ததுடன் நேற்று காலை வரை தொடர்ந்து பெய்ததால் மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி மாநகரில் லூர்தம்மாள்புரம், வெற்றிவேல் நகர், மரக்குடி தெரு, தீயணைப்பு நிலையம் ரோடு, வி.இ.ரோடு உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து நின்றது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி, தற்காலிக பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் தேங்கியது. திருச்செந்தூர் ரோட்டில் மழைநீர் ஒரு அடிக்கும் அதிகமாக தேங்கி நின்றதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர் களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
தொடர் மழை காரணமாக தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கியதால் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.35 மணிக்கு தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அங்கும் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி இருந்ததால் ரெயிலை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால் அனைத்து பயணிகளும் மேலூர் ரெயில் நிலையத்திலேயே இறக்கிவிடப்பட்டனர்.
அதேபோல் தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் பாசஞ்சர் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக முழுமையாக 53 வீடுகளும், பகுதியாக 296 வீடுகளும் சேதம் அடைந்து உள்ளன. மாவட்டத்தில் உள்ள 637 குளங்களில் 103 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. மீதி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீர் அத்திமரப்பட்டி- காலாங்கரை பாலத்தை மூழ்கடித்தபடி சென்றதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 186 மில்லி மீட்டர், தூத்துக்குடியில் 163.8 மி.மீ., குலசேகரன்பட்டினத்தில் 144 மி.மீ., திருச்செந்தூரில் 100 மி.மீ. மழை பதிவானது.

Related Tags :
Next Story