விஜயகாந்திற்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற்றது தமிழக அரசு


விஜயகாந்திற்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற்றது தமிழக அரசு
x
தினத்தந்தி 3 Dec 2019 6:33 PM IST (Updated: 3 Dec 2019 6:33 PM IST)
t-max-icont-min-icon

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது.

சென்னை, 

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், கடந்த 2012 முதல் 2016  வரை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவையும், தமிழக  அமைச்சர்களையும் அவதூறாக பேசியதாக தமிழக அரசு சார்பில்  5 அவதூறு வழக்குகள் போடப்பட்டன. 

இந்த வழக்குகள் மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன், விஜயகாந்த் மீதான 2 வழக்குகளை திரும்ப பெறுவதாக அரசு தரப்பு தெரிவித்தது. அரசு விளக்கத்தையடுத்து 2013, 2014 ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
1 More update

Next Story