'குயின்' இணைய தொடருக்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் புதிய மனு
'குயின்' இணையதள தொடர் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் தடை விதிக்க கோரி ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை,
ஜெயலலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் 'குயின்' என்ற இணைய தொடரை இயக்கியுள்ளார். இணையதளத்தில் நாளை இந்த தொடர் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த இணையதள தொடரை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததை அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும், அதை பரிசீலித்து குயின் தொடரை வெளியிட தடைவிதிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story