ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: முன்னிலை நிலவரம்


ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: முன்னிலை நிலவரம்
x
தினத்தந்தி 2 Jan 2020 12:04 PM IST (Updated: 2 Jan 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரம் வருமாறு:-

சென்னை
 
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி இடங்களை நிரப்புவதற்காக தேர்தல் நடந்தது. முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகள்  பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகள் பதிவானது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு.  315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணியில் 30 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் விவரம் வருமாறு:-

பதவிகள்

அ.தி.மு.க கூட்டணி

தி.மு.க. கூட்டணி

மற்றவர்கள்

மாவட்ட கவுன்சிலர்
(515)

35

55

0

ஒன்றிய
கவுன்சிலர்
(5067)

100

106

3

* தேனி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான போட்டியில் 10-ல் 3 இடங்களில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

* தேனி மாவட்டத்தில் 10 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் போடி, பெரியகுளம், ஆண்டிபட்டியில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

* மதுரை செல்லம்பட்டி ஒன்றியம் 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அமமுக வேட்பாளர் வெற்றி

* தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் 2வது வார்டில் அமமுக வேட்பாளர் வெற்றி

* கன்னியாகுமரி மேல்புறம் ஒன்றியம் வார்டு உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசவுந்தரி, 181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

* தூத்துக்குடி: மேல திருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பேச்சியம்மாள் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய 1ஆவது வார்டில் திமுக வேட்பாளர் ரமேஷ் வெற்றி.

* நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் 1ஆவது வார்டில் திமுக வேட்பாளர் மனோகரன் வெற்றி! 

Next Story