ஜனவரி 8-ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வர தலைமைச் செயலாளர் உத்தரவு


ஜனவரி 8-ம் தேதி  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  பணிக்கு வர  தலைமைச் செயலாளர் உத்தரவு
x
தினத்தந்தி 3 Jan 2020 9:56 PM IST (Updated: 3 Jan 2020 9:56 PM IST)
t-max-icont-min-icon

ஜனவரி 8-ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் ஏஐடியுசி, சிஐடியு, ஏஐயுடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிலாளர் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று, பல துறைகளில் உள்ள தொழிலாளர்களுடன் இணைந்து வங்கி ஊழியர்களும் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஜனவரி 8, 9) ஆகிய இரு நாள்கள் அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டுத் துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பர் என தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், ஜனவரி 8-ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என  தலைமைச் செயலாளர் கே.சண்முகம்  உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், வரும் 8ம் தேதி நடக்கும் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது. அன்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியத்தை பிடித்தம் செய்ய உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story