பாஜகவின் தமிழக தலைவர் நியமனம் குறித்து பாஜக தலைமையகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம்
பாஜகவின் தமிழக தலைவர் நியமனம் குறித்து பாஜக தலைமையகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பரில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் கடந்த 4 மாதங்களாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. பாஜகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜகவின் மேலிட பிரதிநிதிகள் சிவபிரகாஷ், நரசிம்மராவ் ஆகியோர் தலைமை வகித்து வருகின்றனர்.
பாஜகவின் மூத்த நிர்வாகியான து. குப்புராமுவை தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக செய்திகள் பரவுகின்றன.
Related Tags :
Next Story