நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு செய்யப்படும் துரோகம் -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வில் தமிழக அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு கிராமப்புற மாணவர்களுக்குச் செய்யப்படும் துரோகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ”நீட் தேர்வில் தமிழக அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு கிராமப்புற மாணவர்களுக்குச் செய்யப்படும் துரோகம்” என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழக அரசின் நிலைப்பாடு துரோகம் என்றால், அந்த துரோகத்திற்கு விதை போட்டது காங்கிரஸ் தான்” என்று குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், “ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உள்ளவரை நீட் தேர்வு தமிழகத்தில் வரவில்லை. அவர் மறைவிற்குப் பிறகே தமிழகத்திற்கு நீட் தேர்வு வந்தது” என்று குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story