ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பாற்ற இளைஞர்கள் அணி திரள வேண்டும் - மு.க.ஸ்டாலின்


ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பாற்ற இளைஞர்கள் அணி திரள வேண்டும்  - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 Jan 2020 5:55 PM IST (Updated: 12 Jan 2020 5:55 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பாற்ற இளைஞர்கள் அணி திரள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

1921 ஜனவரி 12ம் தேதி கன்னாட் அவர்களால், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க சார்பில் வாழ்த்துகள். சுப்பராயலு ரெட்டி தலைமையில், முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் முதல், தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணா, பெண்களுக்கு சொத்துரிமை, இட ஒதுக்கீடு, சமத்துவபுரம் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றிய கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வரலாறும் நினைவும், சட்டப்பேரவைக்கு உள்ளது. அந்தத் திராவிட இயக்க வேருக்கு உரம் சேர்த்து, பாதுகாக்க, இளைஞர்கள் ஆயத்தமாக வேண்டும்.

நூற்றாண்டு நிறைவில் புதிய அத்தியாயம் தொடங்கும் போது,  தமிழ்நாடு சட்டமன்றத்தின் பணிகள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே வழிகாட்டும் வகையில் செப்பனிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story