கடலூரில் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கடலூரில் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2020 2:41 PM IST (Updated: 2 Feb 2020 2:41 PM IST)
t-max-icont-min-icon

வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுவதையொட்டி வரும் 8ம் தேதி கடலூரில் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

வடலூர், 

வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) 149-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது. 

தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி வடலூர் தெய்வ நிலையத்தில்  வருகிற 7-ந்தேதி கொடியேற்றம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேவையான முன்னேற்பாடுகளை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஜோதி தரிசன விழாவில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் வடலூரில் திரள்வார்கள். இதையொட்டி அங்கு சன்மார்க்க அன்பர்கள் தங்குவதற்கு தேவையான இட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் செய்து வருகிறது.

இந்நிலையில் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுவதையொட்டி வரும் 8ம் தேதி கடலூரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
1 More update

Next Story