அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடந்தது.
பின்னர் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க பொருளாளார் துரைமுருகன், முதன்மை செயளாலர் கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
அதையடுத்து மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
அரசியல் அறத்தைப் போதித்த காஞ்சி தந்த வள்ளுவன்-கொள்கை உரத்தை ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன்-பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 51வது நினைவுநாள் இன்று .
அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு? அவரது குரலும், கொள்கையும், கோட்பாடும் வாழ்க்கையும், வாழ்த்தும் என்றும் நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறது என்று அண்ணன் விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம் என சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அறத்தைப் போதித்த காஞ்சி தந்த வள்ளுவன்- கொள்கை உரம் ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன்- பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவுநாள் இன்று!
— M.K.Stalin (@mkstalin) February 3, 2020
அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு? அவரது கொள்கையும், வாழ்வும் என்றும் நம்மை இயக்குகிறது. அண்ணன் விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம்! pic.twitter.com/RWOM6D0NE6
Related Tags :
Next Story