குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு - டிஎன்பிஎஸ்சி

குரூப்-4 பணிக்காக கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்தாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் குரூப்-4 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. இதனிடையே, குரூப் 4 தேர்வு முறைகேடு காரணமாக அது தொடர்பான பணிகள், ஆட்கள் தேர்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை முடிந்த பிறகே நடவடிக்கைகள் தொடரும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், குரூப் 4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது எனவும் தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குரூப்-4 காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 9,398-ல் இருந்து 9,882 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ள தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாவதும், குறைவதும் வழக்கமான ஒன்று தான் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிக்காக கூடுதலாக தற்போது 484 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story