பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து - மு.க.ஸ்டாலின்


பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து  - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Feb 2020 11:27 AM GMT (Updated: 2020-02-10T16:57:21+05:30)

மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது!

மத்திய அரசில் உள்ள அமைச்சர்களும், அந்த மத்திய அரசை அனைத்து வகைகளிலும் கட்டுப்படுத்தும் சங்பரிவாரங்களும், இடஒதுக்கீட்டுக்கு எதிராக, தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகள் பல்வேறு குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் வித்திட்டுள்ளது.

ஆகவே பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல்- சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாத்திட மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story