டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் திறப்பு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நற்பணி மன்றம் பாராட்டு


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் திறப்பு: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நற்பணி மன்றம் பாராட்டு
x
தினத்தந்தி 10 Feb 2020 11:15 PM GMT (Updated: 2020-02-11T03:50:03+05:30)

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை சிறப்பாக அமைத்து திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதித்தனார் நற்பணி மன்றம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

சென்னை, 

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திருச்செந்தூரில் வருகிற 22-ந் தேதி(சனிக்கிழமை) திறக்கப்பட உள்ளது. மணிமண்டப திறப்பு விழா குறித்து தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத் தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன் தலைமையில் மாநில தலைமை நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள மன்றத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மன்றத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வரவேற்று பேசினார். தலைமை பொதுச்செயலாளர் எஸ்.ஜெகதீஸ் சவுந்தர் முருகன் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் துணைத்தலைவர் சாம் மனோகர், பொருளாளர் எம்.நசீர் அகமது, துணை பொதுச்செயலாளர்கள் எம்.சி.ராமச்சந்திரன், பால முனியப்பன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுக நயினார், ஏ.ஞானப்பால், ஏ.கணேசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபத்தை சிறப்பாக அமைத்து திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறது.

* மணிமண்டப விழாவில் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது.

* விழாவுக்கு வரும் மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்க மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story