தமிழக பட்ஜெட் ; பா.ம.க.வின் மற்றொரு கோரிக்கை நிறைவேறியது- ராமதாஸ் டுவிட்டரில் பதிவு


தமிழக பட்ஜெட் ; பா.ம.க.வின் மற்றொரு கோரிக்கை நிறைவேறியது- ராமதாஸ் டுவிட்டரில் பதிவு
x
தினத்தந்தி 14 Feb 2020 5:49 AM GMT (Updated: 2020-02-14T11:33:10+05:30)

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்ற பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

2020-2021 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல் அமைச்சரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார்.  பட்ஜெட்டில் அனைத்து  அரசு பேருந்துகளிலும்  கண்காணிப்பு  காமிரா பொருத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. 

இந்த அறிவிப்பை வரவேற்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது ; - பா.ம.க.வின் மற்றொரு கோரிக்கை நிறைவேறியது.  பெண்களின் பாதுகாப்புக்காக  அனைத்து அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படும் என்று  நிதிநிலை அறிக்கையில்  நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  அறிவிப்பு.

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்ற பட்ஜெட்  அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி  அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி! 

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடியும், காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்காக ரூ.700 கோடியும்  ஒதுக்கப்பட்டிருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது! தமிழ்நாட்டு நலனுக்காக பிற பாசனத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்! ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Next Story