மெட்ரோ ரெயிலில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதி

மெட்ரோ ரெயிலில் சைக்கிள் கொண்டு செல்லலாம் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதேபோல் பயணிகள் சில பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.
அந்தவகையில் மெட்ரோ ரெயிலில் பயணிகள் இறைச்சி வகைகள், உணவு பொருட்கள் மற்றும் சைக்கிள் உள்ளிட்ட பல பொருட்களை கொண்டு செல்ல கூடாது என அறிவிப்பு விடுத்திருந்தது.
இந்தநிலையில் அந்த கட்டுபாட்டில் ஒன்றை மட்டும் தளர்த்தி, மின்சார ரெயில்களில் கொண்டு செல்வது போல, மெட்ரோ ரெயிலிலும் பயணிகள் தங்களது சைக்கிளை மட்டும் இனி எடுத்து செல்லலாம் என சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
பொது மக்கள் மற்றும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிக்காக இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story