முதலமைச்சராக 3 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து


முதலமைச்சராக 3 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து
x
தினத்தந்தி 16 Feb 2020 6:25 AM GMT (Updated: 2020-02-16T11:55:57+05:30)

முதலமைச்சராக 3 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை, 

எடப்பாடி பழனிசாமியை கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சராக சசிகலா அறிவித்த போது, மூன்று மாதம் தான் இவரால் ஆட்சி நடத்த முடியும் என  கூறப்பட்ட நிலையில், அனைத்தையும் தவிடுபொடியாக்கி தன்னை ஒரு சாணக்கியனாகவும் வளர்த்துக்கொண்டு  3 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 4 ஆம் ஆண்டிலும் அடியெடுத்து வைத்தார்.

இந்த நிலையில் முதலமைச்சராக 3 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவில் கூறியதாவது:-

முதலமைச்சர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனைகள் பல தொடரவும் வாழ்த்துகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்

Next Story