நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை ஐகோர்ட்டு அனுமதி


நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர சென்னை ஐகோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 17 Feb 2020 7:43 AM GMT (Updated: 17 Feb 2020 9:41 AM GMT)

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளாது.

சென்னை, 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் தொடர்பாக நடிகர் சங்க முன்னாள் தலைவர் விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தலை நடத்தலாம் என்றும், ஆனால் பதிவான ஓட்டுகளை எண்ணக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவை பிறப்பித்து, வழக்கை தள்ளிவைத்தது.

இந்தநிலையில், இந்த தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும், சங்கத்தின் உறுப்பினர் ஏழுமலை, பெஞ்சமின் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், நடிகர் சங்க தேர்தல் சட்டப்படி நடைபெறாததால், தேர்தலை ரத்து செய்வதாக கடந்த மாதம் 24-ந்தேதி தீர்ப்பு அளித்தார். 

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் மேல்முறையீடு செய்தார்.

தேர்தலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணி, முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும்’. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை  ஐகோர்ட்டு நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறையை தொடர வேண்டும் என்று அனுமதி அளித்துள்ளது. மேலும் ஐகோர்ட்டு ஒப்புதலின்றி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடக்கூடாது என தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. 

சிறப்பு அதிகாரி நியமனத்தை உறுதி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கும் சேர்த்து விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்து, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story