மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல் அமைச்சர் வேண்டுகோள்
சர்வதேச மகளிர் தின பரிசாக மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை,
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்பொழுது, சர்வதேச மகளிர் தின பரிசாக, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story