சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு கொரோனா தொற்று

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தை கொரோனா தொற்று மிரட்டி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200 ஐ தாண்டியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை இதய நோய் சிகிச்சை பிரிவு மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 34 வயதான அந்த மருத்துவர், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றிய மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக இதய நோய் சிகிச்சை பிரிவு கட்டடம் மூடப்பட்டது.
இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story