10ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு; பள்ளி கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு
கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணையை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு உள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதனை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் 10ம் வகுப்பு பொது தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, ஜூன் 1ந்தேதி முதல் 12ந்தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும். சுகாதார துறையினரின் அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ந்தேதி நடைபெறும். இதேபோன்று வரும் 27ந்தேதி பிளஸ் 2 பொது தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என தெரிவித்து உள்ளார்.
10ம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி,
ஜூன் 1ல் மொழிப்பாடம்
ஜூன் 3ல் ஆங்கிலம்
ஜூன் 5ல் கணிதம்
ஜூன் 6ல் விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 8ல் அறிவியல்
ஜூன் 10ல் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும்.
Related Tags :
Next Story