அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை


அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 13 May 2020 10:09 AM IST (Updated: 13 May 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் கலந்துகொண்டனர்.

இதில் முதல் அமைச்சர் பேசும்பொழுது, கொரோனா வைரஸ் பற்றியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஒலிபெருக்கிகள், ஊடகங்கள், குறும்படங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப வைரஸ் தொற்றை தடுக்க முடியும்.  பரவலை தடுத்து நிறுத்த முடியும் என தெரிவித்து கொள்கிறேன்.  இதற்கு காவல் துறை, உள்ளாட்சி துறை ஆகியவை துணைபுரிந்து உள்ளன.

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது.  அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் தங்கு தடையின்றி, எந்தவித சிரமும் இன்றி கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது.

விவசாயிகளிடையே அதிகாரிகள் சென்று, விளைபொருட்களை விலைக்கு வாங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், அரசாங்கமே, வீதி வீதியாக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று விற்பனை செய்து வருகிறது.

அதற்கு மாவட்ட கலெக்டர்களும், காவல் துறை மற்றும் அனைத்து உயரதிகாரிகளும் துணை நிற்கின்றனர் என கூறியுள்ளார்.

Next Story