10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் -அமைச்சர் செங்கோட்டையன்


10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் -அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 3 Jun 2020 1:48 PM IST (Updated: 3 Jun 2020 2:14 PM IST)
t-max-icont-min-icon

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.

சென்னை

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  கூறியதாவது:-

பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும். பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள்  திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியான பிறகே பெற்றோர்களை அழைத்து ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து  பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

அதே சமயம், மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், பள்ளிப் பாடங்களைக் குறைப்பது குறித்து 16 பேர் கொண்ட உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Next Story