கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ. விரைவில் குணமடைய வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்


கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ. விரைவில் குணமடைய வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 Jun 2020 6:03 PM IST (Updated: 13 Jun 2020 6:03 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ. விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ. விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story