புதிதாக 1,989 பேருக்கு தொற்று உறுதி தமிழகத்தில் ஒரே நாளில் 30 பேரின் உயிரை பறித்த கொரோனா
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 30 பேரின் உயிரை கொரோனா பறித்தது. புதிதாக 1,989 பேர் தொற்றில் சிக்கினர். இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிப்புக்கு ஏற்ப நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப உயிர் பலியும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 30 பேரின் உயிரை கொரோனா பறித்து உள்ளது. இதன் மூலம் கொரோனா கோரதாண்டவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 26 பேர் உயிரிழப்பு
சிகிச்சை பலனின்றி நேற்று 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 27 வயது வாலிபர், 27 வயது இளம்பெண் உட்பட 26 பேரும், விழுப்புரத்தில் 29 வயது வாலிபரும், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒருவரும் அடங்குவர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்து உள்ளது.
17 ஆயிரத்து 911 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,956 பேர் நேற்று கொரோனா பாதிப்பில் சிக்கினர்.
புதிதாக 1,989 பேருக்கு தொற்று
வெளிநாடுகளில் இருந்து வந்த 13 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 19 பேர் என 32 பேருக்கும் தொற்று உறுதியானது. இதன் மூலம் நேற்று மொத்தம் 1,989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 1,183 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள் ஆவர்.
தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 91 ஆயிரத்து 817 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 26 ஆயிரத்து 350 ஆண்களும், 16 ஆயிரத்து 320 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 17 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 2 ஆயிரத்து 194 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 ஆயிரத்து 813 முதியவர்களும் அடங்குவர் நேற்று மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட 97 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 254 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 30 ஆயிரத்தை கடந்தது
தமிழகத்தில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு உள்ள பட்டியலில் 28 மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன. அதன்படி சென்னையில் 1,487 பேரும், செங்கல்பட்டில் 136 பேரும், திருவள்ளூரில் 78 பேரும், திருவண்ணாமலையில் 50 பேரும், தூத்துக்குடியில் 30 பேரும், காஞ்சீபுரத்தில் 22 பேரும், நெல்லையில் 18 பேரும், திருவாரூர், மதுரையில் தலா 15 பேரும், விழுப்புரம், வேலூர், சிவகங்கையில் தலா 13 பேரும், கடலூரில் 12 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரியில் தலா 11 பேரும், தஞ்சாவூரில் 10 பேரும், திண்டுக்கலில் 11 பேரும், திருச்சியில் 6 பேரும், கரூர், சேலத்தில் தலா 5 பேரும், தென்காசியில் 3 பேரும், விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம், தர்மபுரியில் தலா 2 பேரும், அரியலூரில் ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் மட்டும் நேற்று புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்ட 1,487 பேரால் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இதுவரை 30 ஆயிரத்து 444 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 180 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 ஆயிரத்து 947 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். 316 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story