மின்சார அளவு கணக்கீடு தொடர்பான வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மின் கணக்கீடு செய்யப்படவில்லை. இதனால் மின்நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்தது.
மின்சார வாரியம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story