தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2020 6:39 PM IST (Updated: 21 Jun 2020 10:14 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 64 பேருக்கும், கடலூரில் 102 பேருக்கும், திருவண்ணாமலையில் 77 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 31,401 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 8,92,612 எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகட்சமாக இன்று 53 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதில் 37 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 16 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 1,438 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,754 பேர் ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story