நெய்வேலி என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ, 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story