புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபர் கைது; கோவிலில் பொங்கல் வாங்கி தருவதாக அழைத்து சென்று கொடூரம்
7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவிலில் பொங்கல் வாங்கி தருவதாக அழைத்து சென்று கொடூர செயலில் ஈடுபட்டது வாக்குமூலத்தில் தெரியவந்தது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த மாதம் 30-ந் தேதி இரவில் இருந்து காணவில்லை என்று ஏம்பல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த சிறுமி, ஏம்பல் கிளவிதம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்துவாரியில் நேற்று முன்தினம் பிணமாக கிடந்தாள். அந்த சிறுமியின் முகம், தலை உள்பட உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.
இதனால் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தினர். இந்த நிலையில் அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பூக்கடையில் வேலை செய்யும் ராஜா (வயது 27) என்பவர் கறம்பவயல் காளிகோவில் அருகே அழைத்து சென்றதாக பொதுமக்கள், போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சந்தேகத்தின்பேரில், ராஜாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அந்த சிறுமியை கொலை செய்தது ராஜாதான் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜா அளித்த வாக்குமூலத்தில் கிடைத்த தகவல்கள் பற்றி போலீசார் தெரிவித்ததாவது:-
கடந்த 30-ந்தேதி கறம்பவயல் காளி கோவிலுக்கு மாலை கொடுக்க ராஜா சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை பார்த்து, ‘கோவிலுக்கு போகிறேன், நீ வந்தால் பொங்கல் வாங்கி தருகிறேன்‘ என்று அழைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய அந்த சிறுமி, அவருடன் சென்றாள். கோவிலுக்கு சென்று மாலை கொடுத்து விட்டு 2 பேரும் திரும்பி உள்ளனர். இதை கோவில் பூசாரி உள்ளிட்ட சிலர் பார்த்துள்ளனர்.
அந்த சிறுமியை, ராஜா ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது சிறுமி வலியால் துடித்து சத்தம் போட்டதால், யாராவது அங்கு வந்து விடுவார்கள் என்று நினைத்து, சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் அடிவயிறு, முகம் உள்பட உடலில் பல்வேறு இடங்களில் கம்பால் குத்தியுள்ளார். இதில் சிறுமிக்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் சிறுமியை சிறிது தூரம் தூக்கி வந்து செடிகள் நிறைந்த வாய்க்காலில் போட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு ராஜா சென்றுள்ளார். மறுநாள் வழக்கம்போல் தன்னுடைய வேலைகளை செய்துள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ராஜாவிற்கு குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கம் இருந்துள்ளது. பெரும்பாலும் போதையில் இருக்கும் அவர் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டதும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். ராஜா மீது போக்சோ சட்டம், கற்பழிப்பு, கொலை செய்தல், தடயங்களை மறைத்தல், வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story