ஒரே நாளில் 4,343 பேருக்கு தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது


ஒரே நாளில் 4,343 பேருக்கு தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 3 July 2020 5:00 AM IST (Updated: 3 July 2020 4:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 343 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை,

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 67 பேர் உட்பட 4 ஆயிரத்து 343 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 62 ஆயிரத்து 598 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 ஆயிரத்து 95 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 56 ஆயிரத்து 21 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

57 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதனால் கொரோனா உயிரிழப்பு 1,321 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 964 பேர் இறந்து உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று உயிரிழந்தவர்களில் 12 பேர் கொரோனா நோய் தொற்றாலும், 45 பேர் மற்ற நாள்பட்ட நோயுடன், கொரோனா தாக்கம் ஏற்பட்டதாலும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 4 ஆயிரத்து 836 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 11 ஆயிரத்து 811 முதியவர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட 219 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 517 முதியவர்களும் நேற்று பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் நேற்று 35 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சென்னயில் 2 ஆயிரத்து 27 பேரும், மதுரையில் 273 பேரும், செங்கல்பட்டில் 171 பேரும், திருவண்ணாமலையில் 170 பேரும், திருவள்ளூரில் 164 பேரும், கள்ளக்குறிச்சியில் 139 பேரும், வேலூரில் 138 பேரும், ராணிப்பேட்டையில் 127 பேரும், ராமநாதபுரத்தில் 117 பேரும், காஞ்சீபுரத்தில் 112 பேரும், திண்டுக்கலில் 94 பேரும், சேலத்தில் 88 பேரும், விருதுநகரில் 76 பேரும், தூத்துக்குடியில் 70 பேரும், தேனியில் 65 பேரும், சிவகங்கையில் 63 பேரும், திருச்சியில் 53 பேரும், நெல்லையில் 49 பேரும், விழுப்புரம், கோவையில் தலா 47 பேரும், கடலூரில் 44 பேரும், கன்னியாகுமரியில் 38 பேரும், புதுக்கோட்டை, திருவாரூரில் தலா 28 பேரும், தென்காசியில் 22 பேரும், ஈரோட்டில் 17 பேரும், தஞ்சாவூரில் 15 பேரும், கிருஷ்ணகிரியில் 10 பேரும், நீலகிரியில் 8 பேரும், தர்மபுரியில் 7 பேரும், பெரம்பலூர், திருப்பூரில் தலா 6 பேரும், கரூரில் 4 பேரும், நாகப்பட்டினத்தில் 3 பேரும், திருப்பத்தூரில் இருவரும் இடம்பெற்றுள்ளனர். அரியலூர், நாமக்கலில் பாதிப்பு இல்லை.

தமிழகத்துக்கு, விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்த 404 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 346 பேருக்கும், ரெயில் மூலம் வந்த 412 பேருக்கும், சாலை மார்க்கமாக வந்த 2 ஆயிரத்து 437 பேருக்கும், கடல் மார்க்கமாக வந்த 21 பேர் என மொத்தம் 3 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story