கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 23 பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் தலைநகர் சென்னைதான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் முதலிடம் வகிக்கிறது. நேற்று மாலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,689 ஆக உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை மேலும் 23 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 9, ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3, தனியார் மருத்துவமனையில் ஒருவர் என 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Tags :
Next Story