திருப்பூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு - வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல்


திருப்பூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு - வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 July 2020 6:04 AM GMT (Updated: 5 July 2020 6:04 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

திருப்பூர்,

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனகள் நடைபெற்று வருகிறது. ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 17க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைத்து மாவட்ட போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூரில் 55 தனிமைபடுத்தப்பட்ட பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 17 பகுதிகளில் சென்னையில் இருந்து வந்தவர்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணியாளர்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, திருப்பூரில் இதுவரை 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில் 123 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Next Story