மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல் + "||" + More than 3,756 people infected with coronavirus in Tamil Nadu - Health Department

தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெலியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கொரோனா தொர்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் இன்று 1,261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு என்ணிக்கை 21,766 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 273 பேருக்கும், திருவள்ளூரில் 300 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 133 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரையில் 379 பேருக்கும், வேலூரில் 160 பேருக்கும், தூத்துக்குடியில் 141 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 64 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 1,700 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதில் 26 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,051 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 74,167 கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது 46,480 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 34,962 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழகம் முழுவதும் 13,87,322 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பாட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,12,823 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 9,12,823 ஆக உயர்ந்துள்ளது.
2. சீனாவில் குணம் அடைந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் இருவருக்கு கொரோனா !
சீனாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த சிலருக்கு மீண்டும் அந்நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா
பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
5. சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற புதுவை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருடன் கலந்து கொண்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...