கொரோனா ஊரடங்கால் நிதி நெருக்கடி: அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம் ரத்து - அரசாணை வெளியீடு


கொரோனா ஊரடங்கால் நிதி நெருக்கடி: அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம் ரத்து - அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 11 July 2020 12:45 AM IST (Updated: 11 July 2020 12:19 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள காரணத்தால், அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநில அரசு ஆணையிட்டுள்ள சிறப்புப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அதற்கேற்ற மதிப்பூதியத்தை, தமிழ்நாடு அரசு ஊழியர் அடிப்படை விதியின்படி அரசு வழங்கி வருகிறது. ஆனால் கொரோனா தொற்று தொடர்பாக தற்போது அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே வாரியங்கள், ஆணையங்கள், குழுக்களில் நியமனப் பதவிகளில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதை ரத்து செய்து அரசு உத்தரவிடுகிறது.

அதன்படி நியமனப் பதவிகளில் நியமிக்கப்படுவோருக்கு இனி மதிப்பூதியம் வழங்கப்படக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தப் பதவிகளில் இருப்போருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மதிப்பூதியமும் திரும்பப் பெறப்படுகிறது. ஆனால் மதிப்பூதியத்தை வழங்கி இருந்தால் அந்தத் தொகையை திரும்பப் பெறப்படத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story