கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்- உயர்கல்வித்துறை


கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்- உயர்கல்வித்துறை
x
தினத்தந்தி 16 July 2020 6:22 PM IST (Updated: 16 July 2020 6:22 PM IST)
t-max-icont-min-icon

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  இந்த நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கும்  வரும் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

* கலை,அறிவியல் படிப்புகளில் சேர http://tngasa.in மற்றும் http://tndceonline.org என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம்

* தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு http://tngptc.in,http://tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story