"முப்பாட்டன் முருகனின் தனித்தன்மை ஒருபோதும் குன்றாது" - சீமான்
உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை விவாதங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கும் முப்பாட்டன் முருகனின் தனித்தன்மையும், பெரும்புகழும் எத்தகைய இழிபரப்புரையாலும் குன்றிவிடாது.
பகுத்தறிவுப் பரப்புரை என, ஆரியம் கற்பித்துள்ள கட்டுக்கதைகளை விமர்சனம் என்ற பெயரில் இழிவாக பேசுவது எதிர்மறையான தாக்கத்தை தான் ஏற்படுத்துமே தவிர, இதனால் தமிழுக்கும், தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story