திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று


திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 18 July 2020 6:01 PM IST (Updated: 18 July 2020 6:01 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திட்டக்குடி,

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையை விட பிற மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.  கொரோனாவுக்கு எதிரான பணியில் களத்தில் நின்று போராடுபவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் பிரதிநிதிகளும் கொரோனாவின் தாக்கத்திற்கு தப்பவில்லை.   

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து எம்.எல்.ஏ கணேசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார்.

Next Story