தமிழகத்தில் புதிய உச்சம்: ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா தொற்று- 88 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை இலலாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது.
ஆனால், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொற்றுக்கு ஆளாவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கி விட்டுள்ளன. எனினும், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.
சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,65,714 -ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,403 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 3049 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story