கொரோனா பாதிப்பால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.3 லட்சம் நிதியுதவி


கொரோனா பாதிப்பால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.3 லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 20 July 2020 8:00 PM IST (Updated: 20 July 2020 8:00 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊராகக் காவல் நிலைத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் அய்யனார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதனைக் கேள்விப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அய்யனார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மேலும் தலைமைக் காவலர் அய்யனார் குடும்பத்திற்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Next Story