காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க திருப்பூர் டாக்டர் குழு வருகை

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க திருப்பூரில் இருந்து 7 டாக்டர்கள் குழுவினர் வந்துள்ளனர்.
திருப்பூர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 4 ஆயிரம் என்ற வகையில் பாதிப்பு எண்ணிக்கை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு கணக்கு 5 ஆயிரத்தையும் நெருங்கி உள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் அங்கு கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் இல்லை. இதன் காரணமாக அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்களும் அதிகமாக தேவைப்படுகிறது. இதனால் திருப்பூரில் இருந்து 7 டாக்டர்கள் குழுவினர் கொரோனா சிகிச்சை அளிக்க வந்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த பாதிப்பின் காரணமாக டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள் அதிகளவில் அந்த மாவட்டங்களுக்கு தேவைப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து மருத்துவ குழுவினர் அங்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள்.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இருந்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை அளிக்க 7 டாக்டர்கள் குழுவினர் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஒரு குழுவில் ஒரு டாக்டர், மருத்துவ உதவியாளர் உள்பட 4 பேர் இருக்கிறார்கள். இவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் அல்லது ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வருகிறார்கள்.
மேலும், சுழற்சி முறையில் டாக்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறார்கள். திருப்பூரில் நன்கு பயிற்சி மற்றும் முன் அனுபவம் பெற்ற டாக்டர்கள் இருப்பதால், இங்கிருந்து மருத்துவ குழுக்களை வெளிமாவட்டங்களில் இருந்து அனுப்பிவைக்குமாறு கேட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story