செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11579 ஆக உயர்வு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11579 ஆக உயர்வு
x
தினத்தந்தி 25 July 2020 7:37 AM IST (Updated: 25 July 2020 7:37 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11579ஆக உயர்ந்தது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  முன்பு சென்னையில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது பிற மாவட்டங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் செங்கல்பட்டில் மேலும் 271 பேருக்கு புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11579ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் தற்போது 2866 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 8224 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story