தமிழகம் முழுவதும் 15 டி.எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு


தமிழகம் முழுவதும் 15 டி.எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு
x
தினத்தந்தி 25 July 2020 9:35 PM GMT (Updated: 25 July 2020 9:35 PM GMT)

தமிழகம் முழுவதும் 15 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை, 

தமிழகம் முழுவதும் 15 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

* மகேஷ்வரி- சென்னை வேப்பேரி உதவி கமிஷனராக பணியில் இருந்த இவர், பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவில் கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* ஜெரினா பேகம்- சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக(துணை போலீஸ் சூப்பிரண்டு) உள்ள இவர், பதவி உயர்வு பெற்று பழனி சிறப்பு காவல்படை துணை கமாண்டராக மாற்றப்பட்டு உள்ளார்.

* ராஜேஸ்வரி- மதுரை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி.யாக இருக்கும் இவர், பதவி உயர்வு பெற்று கரூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

* கனகேஸ்வரி- திண்டிவனம் டி.எஸ்.பி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று ஈரோடு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.

* கலிவரதன்- திருப்பூர் மனித உரிமை மற்றும் சமூக நீதி டி.எஸ்.பி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று கோவை புதூர் சிறப்பு காவல்படை துணை கமாண்டராக பொறுப்பு ஏற்பார்.

* வெற்றிச்செல்வன்- மதுரை வரதட்சணை ஒழிப்பு பிரிவு உதவி கமிஷனராக இருக்கும் இவர், பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல்படை துணை கமாண்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* கும்மராஜா- குளித்தலை டி.எஸ்.பி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று சேலம் நகர பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

* ராஜசேகர்- மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை டி.எஸ்.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று போலீஸ் அகடமி கூடுதல் சூப்பிரண்டாக பதவி ஏற்பார்.

* கண்ணன்- அரியலூர் மனித உரிமை மற்றும் சமூகநீதி டி.எஸ்.பி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு கூடுதல் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

* கோவிந்தராஜூ- சென்னை தேனாம்பேட்டை உதவி கமிஷனராக இருக்கும் இவர், சென்னை தெற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனராக பதவி உயர்வு பெற்று உள்ளார்.

* பாஸ்கரன்- கோவை கிழக்கு குற்றப்பிரிவு உதவி கமிஷனரான இவர், சேலம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

* ஜெயசிங்- சென்னை புளியந்தோப்பு உதவி கமிஷனராக இருக்கும் இவர், ராமநாதபுர மாவட்ட தலைமையக கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

* ராஜூ- சேலம் மாவட்டம் ஆத்தூர் டி.எஸ்.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* உதயகுமார்- சென்னை ஆவடி சிறப்பு காவல்படை உதவி கமாண்டராக பணியாற்றும் இவர், பதவி உயர்வு பெற்று சென்னை பூந்தமல்லி சிறப்பு காவல்படை துணை கமாண்டராக மாற்றப்பட்டார்.

* சுப்பாராஜூ- கன்னியாகுமரி மனித உரிமை மற்றும் சமூகநீதி டி.எஸ்.பி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று நெல்லை தலைமையக கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story