காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு


காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 2 Aug 2020 8:39 AM GMT (Updated: 2020-08-02T14:09:52+05:30)

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காஞ்சிபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 747 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 5,918 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 3,717 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 112 பேர் பலியாகி உள்ளனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை  15 ஆயிரத்தை கடந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 327 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 193 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 11,564 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 3,049 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 253 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story