ஆகஸ்ட் 15-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து


ஆகஸ்ட் 15-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து
x
தினத்தந்தி 3 Aug 2020 3:32 PM GMT (Updated: 2020-08-03T21:02:59+05:30)

ஆகஸ்ட் 15-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

சென்னை, 

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக ராஜ் பவன் தெரிவித்துள்ளது. 

சுதந்திர தினத்தின் மாலையில் நடைபெறும் தேநீர் விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.  

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உடல்நிலை சீராக உள்ளதாக ராஜ்பவன் விளக்கம் அளித்துள்ளது 

முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. லேசான அறிகுறி உள்ளதால் அவரை ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. மருத்துவமனையின் மருத்துவர் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.  

Next Story